அமைவிடம்: காஞ்சிபுரத்திலிருந்து 244 கி.மீ., கும்பகோணத்திலிருந்து முழையூர் வந்து அங்கிருந்து 1 கி.மீ.
சென்றால் இத் தலம். சத்திமுற்றத்திற்கு அருகில். செங்கல்பட்டிலிருந்து 264 கி.மீ., சென்னையிலிருந்து 314 கி.மீ.
திருச்சியிலிருந்து 83 கி.மீ. மதுரையிலிருந்து 213 கி.மீ
வரிசை எண் : 141
சிறப்பு : சோழர்களின் தலைநகராக விளங்கியது. இங்குதான் அப்பர் சுவாமிகள் உண்ணாவிரதமிருந்து சமணர்களின்
பிடியில் இருந்த சிவன் கோயிலை மீட்டார். சிவன் கோயிலை அவர்கள் மறைத்து சமண் பாழியாக மாற்றியிருந்தனர்.
இக்கோயிலுக்கு தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான்
ஆறு சோழர்கள் காலத்தில் பழையாறு என வழங்கப்பட்டது.
இறைவன்:சோமேசர்
இறைவி : சோமகலாம்பிகை
தலமரம்: நெல்லி
தீர்த்தம் : சோம தீர்த்தம்
பாடல் : அப்பர்
முகவரி : அருள்மிகு. சோமேசர் திருக்கோயில்,
பழையாறை,
பட்டீஸ்வரம் அஞ்சல் – 612 703
கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும்
நேரம் : காலை 06.00 – 12.30 ; மாலை 04.00 – 09.00
தொடர்புக்கு : 0435-2416976
இருப்பிட வரைபடம் |